சட்ட விரோதமான முறையில் தங்க நகைகளை எடுத்து வர முற்பட்ட நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது…

(FASTNEWS | COLOMBO) – சட்ட விரோதமான முறையில் தங்க நகைகளை எடுத்து வர முற்பட்ட வெளிநாட்டு விமான சேவை ஒன்றில் கடமையாற்றும் இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி பகுதியை சேர்ந்த குறித்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு இன்று(11) காலை 10.00 மணியளவில் டோஹாவில் இருந்து வருகை தந்த கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR-664 என்ற விமானத்தின் மூலம் குறித்த கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபரிடம் இருந்து 21,500,000 ரூபா பெறுமதியான 4.43Kg எடையுடைய தங்க வளையல்கள் 423 கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.