இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பாடுவதற்கு தீமானித்தது.
இதன்படி நேற்றைய ஆட்ட நேரம் நிறைவடையும் போது, பாகிஸ்தான் 6 விக்கட்டுகளை இழந்து 282 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
மிஸ்பா உல் ஹக் ஆட்டமிழக்காமல் 110 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காதுள்ளார்.
அதேநேரம் இங்கிலாந்து சார்பாக க்றிஸ் வோக்ஸ் 45 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மிஸ்பா உல் ஹக் சதத்தினை பூர்த்தி செய்த காணொளி இணைப்பு..
[youtube url=”https://www.youtube.com/watch?v=W7tqOhxHnoY” width=”560″ height=”315″]