சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ பெர்னாண்டோவை எதிர்வரும் 09ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
————————————————————- UPDATE
சதொச நிறுவன முன்னாள் தலைவர் ஒருவர் FCID இனால் கைது….
சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ பெர்னாண்டோ கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று(06) நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சதொச நிறுவனத்திற்கு சொந்தமான 39 மில்லியன் ரூபா பணத்தினை முறைகேடாக பயன்படுத்தி கட்சி அலுவலகங்களுக்கு கெரம் அட்டை மற்றும் டாம் அட்டைகள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் பெற்றுக் கொடுத்தமை தொடர்பில் பொது சொத்துச் சட்டத்தின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Rishma