(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
லங்கா சதொச ஊழியர்கள் 153 பேரை 2012 ஜனவரி 1ஆம் திகதி முதல் 2012 டிசம்பர் 31ஆம் திகதி வரை அரசியல் நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தியமை மற்றும் சதொச நிதியத்தின் ஊடாக குறித்த குழுவிற்கு கொடுப்பனவுகளை வழங்கியமை தொடர்பான வழக்கு தொடர்பிலேயே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கடந்த மே மாதம் 30ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட ஐந்து வழக்குகளில் ஒன்றுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா அழைப்பாணை அனுப்பியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அரச கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் சதொசவின் முன்னாள் பணிப்பாளர் மொஹமட் ஷக்கீர் ஆகியோருக்கு எதிராக இந்த அழைப்பாணை அனுப்பட்டுள்ளது.