சத்தியம் செய்வதற்கு ஆனந்த தேரர் குர்ஆன்’னை கேளிக்கையாய் நினைக்கின்றாரா?

கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் மாத்தறை பாஹியன்கல ஆனந்த சாகர தேரர் ஆகியோருக்கிடையில் பகிரங்க விவாதமொன்று நேற்று(28) தனியார் தொலைக்காட்சியான “ஹிரு” தொலைக்காட்சியின் “சலகுன” என்னும் நிகழ்ச்சியினூடாக நடைபெற்றது.

குறித்த விவாதத்தின் போது அமைச்சர் ரிஷாத் வில்பத்துக் காட்டுக்குள் மீள் குடியேற்றங்கள் இடம்பெறவில்லை என ஆதாரங்களுடன் முன்வைக்க, வேறு வழியின்றி விவாதத்தின் ஆரம்பத்திலேயே, ஆனந்த தேரர் வாயடைத்துப் போனார்.

குறித்த விவாதத்தில் உண்மையிலேயே பெரும்பாளறது கருத்து தனியொருவனாய் நின்று முஸ்லிம் சமூகத்திற்காய் வாதிட்டதே பெரும் சவால். குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தேரருக்கே குறித்த ஊடகவியலாளர்களின் பெரும் ஒத்துழைப்பொன்று வழங்கப்பட்டிருந்தமை பார்வையாளர்களுக்கு தெட்டத்தெளிவாய் புரிந்திருக்கும்.

எனினும், குறித்த விவாதத்தில் அமைச்சரின் விவாதத்தன்மைக்கு ஈடு கொடுக்க இயலாத ஆனந்த தேரர் இறுதித் தருவாயில் அமைச்சர் கூறியதெல்லாம் உண்மை என்று முஸ்லிம் மக்கள் உயிரிலும் மேலாய் மதிக்கும் புனிதக் குர்ஆனில் சத்தியம் செய்யுமாறு வற்புறுத்தினார் என்பதும் இங்கு கோடிட்டு கூறத்தக்கதோர் விடயம்.

இக்குறித்த சம்பவமானது ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் பெரும் வேதனையளிக்கக் கூடியதோர் விடயமே. முஸ்லிம்கள் பொதுவாய் எச்சந்தர்ப்பத்திலும் புனித அல்குர்ஆனில் சத்தியம் செய்ய மாட்டார்கள் என்பதை அறிந்தும் முஸ்லிங்களை இனவாத அடிப்படையில் சித்தரிக்க முயன்ற தேரரின் செயற்பாடானது முழுமையாய் வெறுக்கத்தக்கதொன்றாகும். இஸ்லாம் மதமானது எந்தவொரு மதத்தினையும் சாடுவதனையோ மதம் குறித்து அவமதிப்பதனையோ முற்றாக தடுக்கும் நிலையில் தேரரின் நிலை குறித்து பௌத்த மதத்தில் எதுவும் கூறப்படவில்லையா?

இதனை சில ஊடகங்கள் கேளிக்கையாக அமைச்சர் ரிஷாத் புனித குர்ஆன் மீது சத்தியம் செய்யாதது வில்பத்து குறித்து தெரிவித்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை அதனாலேயே அவர் குர்ஆன் மீது சத்தியம் செய்யவில்லை என கொட்டை எழுத்துக்களில் பிரசுரித்துள்ளார்கள்.

இது குறித்து முஸ்லிம்கள் கவனத்தில் கொள்வதோடு முஸ்லிம் தலைமைகள் இதுகுறித்து ஆராயவும் கடமைப்பட்டுள்ளார்கள் இங்கு என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(riz)