சத்தியாகிரக போராட்டத்திற்கு தயாராகும் தொழில்நுட்ப பீட மாணவர்களின் பெற்றோர்கள்…

ஒலுவில் தொழில்நுட்ப பீட மாணவ பெற்றோர் ஒன்றியம் சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிக்கு துரிதமாக தீர்வு கிடைக்காவிடின், போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக நேற்று(03) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அந்த சங்கம் இதனை குறிப்பிட்டுள்ளது.

சரியான பாடத்திட்டம் இல்லாமை, மாணவர்களுக்கு தங்குமிட வசதி இல்லாமை மற்றும் தொழில்நுட்ப பீடத்தை நடத்தி செல்ல உரிய முறையில் கட்டிடம் இல்லாமை ஆகிய விடயங்கள் நீண்டகாலமாக காணப்பட்டாலும், அதிகாரிகள் அதற்கு உரிய தீர்வை பெற்றுகொடுப்பதில் காலதாமதப்படுத்துவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.