சத்திரசிகிச்சையின் பின் அகற்றப்பட்ட இரும்பு கம்பி (video)

கம்பளையில் உடபலனவில் இருந்து பல கிராமங்களுக்கு செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பற்ற படிகள் கொண்ட பாதையொன்றில் இருந்து நபர் ஒருவர் தவறி கீழே விழுந்துள்ளார்.

அதன் போது கட்டுமான பணியில் இருந்த கட்டிடமொன்றின் இரும்பு கம்பி ஒன்று அவரது தலையை துளைத்துள்ளது.

குறித்த நபரை கம்பளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் இரண்டு மணிநேர சத்திரசிகிச்சையின் பின் குறித்த இரும்பு கம்பி அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(நன்றி HIRU NEWS)

[youtube url=”https://www.youtube.com/watch?v=0A-4kyIfgYM” width=”560″ height=”315″]