சந்தர்ப்ப சூழ்நிலையால் சினிமாவுக்கு வந்த காஜல் அகர்வாலின் உண்மையான இலட்சியம்…

முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், விண்வெளி வீராங்கனையாக சாதிக்க வேண்டும் என்று ஆசை இருப்பதாக கூறியிருக்கிறார்.

சினிமாவில் முக்கிய இடம் பிடித்துள்ள அனைவருமே சினிமா ஆசையால் திரை உலகிற்கு வந்து இருக்க வாய்ப்பு இல்லை. சிலர் சந்தர்ப்ப சூழ்நிலையால் சினிமாவுக்கு வந்திருக்கலாம். சிலர் சினிமாவில் சாதிப்பதை இலட்சியமாக வைத்து வந்திருப்பார்கள்.

காஜல் அகர்வாலின் உண்மையான இலட்சியம் என்ன என்பதை கூறியுள்ளார்…

“விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவை போல, நானும் விண்வெளி வீராங்கனையாக சாதிக்க வேண்டும் என்பதுதான் எனது சிறு வயது கனவு, இலட்சியம். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை என்னை சினிமா உலகத்தை நோக்கி திருப்பிவிட்டு விட்டது. ஒரு படத்திலாவது விண்வெளி வீராங்கனையாக நடிக்க வேண்டும் என்பது இப்போது எனது கனவு. வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்.”