இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி டக்வர்த் லூயிஸ் முறைபடி 76 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, 303 ஓட்டங்களைப் பெற்றது.
டினேஸ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்ததுடன், ஷனக அதிரடியாக துடுப்பாடி 19 பந்தில் 42 ஓட்டங்கள் எடுத்தார்.
போட்டி மழையினால் சிறிது நேரம் பாதிக்கப்பட்டநிலையில், அயர்லாந்து அணி வெற்றிபெறுவதற்கு, 47 ஓவர்களில் 293 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதன்படி பதிலளித்தாடிய அயர்லாந்து அணி, 40.4 ஓவர்களில் அயர்லாந்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 216 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வி அடைந்தது.
இதன்படி இரண்டு போட்டிகள் தொடரில் இலங்கை அணி 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது

