சந்திமாலுக்கு 3வாரங்களுக்கு கிரிக்கெட் ஆட முடியாது..

இலங்கை கிரிக்கெட் அணியின் உபதலைவர் தினேஷ் சந்திமால் உள்நாட்டுப்போட்டி ஒன்றின் போது உபாதைக்குள்ளாகி சத்திரசிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிகிச்சையானது குணமாக குறைந்தது 3 வாரங்களாகும் என வைத்தியக் குழுவினர் மேலும் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், தற்போதைக்கு இலங்கை அணிக்கு எவ்வித சுற்றுபயணங்களும் இல்லாதவிடத்து, ஒக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ள சிம்பாபேவ் அணிக்கெதிரான போட்டியில் ஆடுவதற்கு சந்திமால் குணமடைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

என்றாலும், சந்திமால், சிம்பாபேவுக்கு எதிரான போட்டிகளுக்காக தற்போதிலிருந்தே பயிற்சி பெற வேண்டும் என்பதே கிரிக்கெட் நிறுவனத்தினரின் எதிர்பார்ப்பாகும்.

சந்திமால் இவ்வருடத்தில் இலங்கைக்காக அதிகூடிய ஒருநாள்,இருபதுக்கு20  மற்றும் டெஸ்ட் துடுப்பாட்ட வரிசையில் 2வது இடத்தினையும் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.