சந்திமால் – அகில டெஸ்ட் குழாமில் இணைப்பு

(FASTGOSSIP| COLOMBO) – நியூசிலாந்து அணிக்கு எதிராக 14ம் திகதி ஆரம்பமாகவுள்ள இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாமிற்கு முன்னாள் தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சய ஆகியோர் உட்சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வலக்கை துடுப்பாட்டரான 29 வயதுடைய சந்திமால் டெஸ்ட் போட்டிகள் 53இல் 3768 ஓட்டங்களை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.