இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலிய அணியினர் நேற்றைய தினம்(28) 3வது ஒருநாள் போட்டியில் ஆடினர்.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியினர் 49.2ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 266ஓட்டங்களை கைப்பற்றியிருந்தனர்,
இதில் தினேஷ் சந்திமால் தனது திறமைகளை வெளிக்காட்டி சதம் விளாசியிருந்தார்.
130 பந்துகளில் சாதித்த குறித்த சதத்தில் 4*(7) பதிவாகியமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த குறித்த இன்னிங்க்ஸ் உடன் சந்திமால் 3000ஓட்டங்களை கடந்த 15வது இலங்கை வீரராக வரலாற்றில் இடம் பிடித்திருக்கின்றார்.
மேலும், இவ்வாண்டு 12 போட்டிகளில் பங்கேற்று 650ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.
2016ம் ஆண்டில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர்கள் பட்டியலில் சந்திமால் 3வது இடத்தை தனதாக்கியுள்ளார்.
708 மற்றும் 672 ஓட்டங்களை முறையே பெற்று சந்திமாலுக்கு முன்னதாக ஆஸி அணி வீரரான ஸ்டீவன் ஸ்மித் மற்றும் இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் ஆகியோர் திகழ்கின்றனர்.
என்றாலும், 2016ம் ஆண்டுக்கான அதிக புள்ளிகளுடன் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான சம்மானம் தினேஷ் சந்திமாலுக்கே உரித்தாகின்றது.
அவரது இவ்வாண்டுக்கான துடுப்பாட்ட சராசரி 72.22 என்பதும் குறிப்பிடத்தக்கது.