அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வகம் அமைத்துள்ளனர். இந்த ஆய்வகம் பூமியை 92.91 நிமிடங்களில் சுற்றி வருகிறது. அது மணிக்கு 27,600 கி.மீட்டர் வேகத்தில் சுற்றுகிறது.
பூமியை சுற்றி வரும்போது அதன் துணை கிரகமான சந்திரனையும் கடந்து செல்கிறது. இவ்வாறு சந்திரனை சர்வதேச விண்வெளி ஆய்வகம் கடந்து செல்லும் காட்சியை விண்வெளியில் உள்ள ஒருவர் போட்டோ எடுத்துள்ளார்.
அவரது பெயர் டைலான் ஓ டோனால். ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர். சர்வதேச விண்வெளி ஆய்வகம் சந்திரனை 0.33 வினாடிகளில் கடந்தபோது அதிரடியாக போட்டோ எடுத்து அவர் சாதனை படைத்துள்ளார்.
இந்த அரிய போட்டோ எடுத்ததற்காக தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தததாக கூறியுள்ளார்.
(riz)