(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசியல்வாதிகளுக்காக வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் தன்னுடைய அரசாங்கத்தின் கீழ் இரத்து செய்வதாக ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளுக்கு தகுதி பாராமல் அனைவருக்கும் ஒரே மாதிரியாக சட்டத்தை நிறைவேற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான செலவை அவர்களது தனப்பட்ட கணக்கில் இருந்து செலவு செய்ய வேண்டும் எனவும் சந்திரிக்கா குமாரதுங்க தொடர்ந்தும் அரசாங்கத்தின் இல்லத்தில் இருப்பதற்கு வெட்கம் இல்லையா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.