சந்தையில் அரிசி விலையை குறைப்பதற்கு அரசு அடுத்த வாரத்திற்குள் ஒரு தொகை அரிசி இறக்குமதி செய்ய இருப்பதாக விளையாட்டு துறை அமைச்சரும் அமைச்சரவை துணை பேச்சாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அரிசி விலை 72 – 75 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. அரிசியை தனியார் துறையினர் விரைவாக இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியது. 500,000 மெற்றிக் தொன் இறக்குமதி செய்யப்பட்டது.
ஆனால் தனியார் துறையினர் குறைந்தளவிலேயே இறக்குமதி செய்திருந்தமை கண்டறியப்பட்டது. சதோசவும் அரிசியை இறக்குமதி செய்து வருகின்றது. அரிசி இறக்குமதியை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
#reeshmaa