போத்தலில் அடைக்கப்பட்ட அல்லது பொதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்யை மட்டும் விற்பனை செய்வது தொடர்பான சட்டத்தை கடுமையாக்குவதற்குத் தென்னைப் பயிர்ச்செய்கை சபை தீர்மானித்துள்ளது.
சந்தையில் தரம் குறைந்த தேங்காயெண்ணை உற்பத்தியைத் தடுப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையுடன் இணக்கப்பாட்டுக்கு வருவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் கபில யகந்தாவல தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதத்திற்குள் சட்டத்தை கடுமையாக்க எதிர்ப்பார்த்துள்ளதுடன், சட்டம் தொடர்பில் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்ளை தௌிவுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.