சனா’வின் ஆபாசபட விவகாரம் – பதவி விலக்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானம்..?

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் சனத் ஜயசூரியவின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் பரிந்துரைக்காது என்ற தகவல்கள் கசிந்துள்ளது.

இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் ஆணையத்தின் தலைமை அதிகாரி ஒருவர் கூறியதாவது,
“..சாம்பியன்ஸ் கிண்ணத்திற்கு பின் ஜயசூரிய பதவி விலகுவார். அவர் அவ்வாறு செய்யாவிட்டால், அவருடைய பதவிக்காலத்தை நீட்டிக்க முடியாது. சமீபத்தில் அவரின் ஆபாசபடம் வெளியாகி மக்களிடையே மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவை அவர் தான் கசிய விட்டார் என கூறப்படுகிறது. எனினும், தற்போது வரை நிரூபிக்கப்படவில்லை. அவர் நாட்டிற்கும், விளையாட்டிற்கும் இழிவு ஏற்படுத்திவிட்டார்.

அதனால் அவர் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக தொடர வேண்டும் என நாங்கள் விரும்பவில்லை..” என தெரிவித்துள்ளார்

எனினும் இதுகுறித்து தற்போது வரை சனத் ஜயசூரிய கருத்து ஏதும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)