சனிக்கிழமை பல பகுதிகளில் நீர்விநியோகத் தடை…

அத்தியாவசிய திருத்தப்பணியின் காரணமாக எதிர்வரும் சனிக்கிழமை(24) காலை எட்டுமணி முதல் கொழும்பின் பல பகுதிகள் 18 மணிநேர நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு, தெஹிவளை- கல்கிசை, கோட்டை மற்றும் கடுவலை மாநகர பகுதிகளுக்கும், மஹரகமை, பொரலெஸ்கமுவை மற்றும் கொலன்னாவை பகுதிகளுக்கும் அத்துடன், கொட்டிகாவத்தை – முல்லேரியா, ரத்மலானை, மற்றும் சொய்சாபுர பிரதேசங்களிலும் நீர்விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.