சன்ன மற்றும் நலீன் பெரேரா’வுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை

இலங்கையின் பிரபல சிங்கள கலைஞர்களான சன்ன விஜேவர்தன மற்றும் நலீன் பெரேரா ஆகியோருக்கு பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னணி நடன ஆசிரியராகவும் நடனக் கலைஞராகவும் சன்ன விஜேவர்தன விளங்குவதுடன், மேரியன்ஸ் இசைக்குழுவின் ஸ்தாபகத் தலைவராகவும் பிரபல பாடகர் மற்றும் கலைஞராக நலீன் பெரேரா திகழ்கின்றார்.

ஹம்பாந்தோட்டை துறைமுக அங்குரார்ப்பண நிகழ்வில் 113 லட்ச ரூபா அரசாங்கப் பணம் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 27ம் திகதி பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகுமாறு இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரபல கலைஞர் ஜக்சன் அந்தனியிடம் ஏற்கனவே இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.