சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் விசேட கூட்டம்…

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை கண்டறிவதற்காக வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர் கருஜயசூரிய கிளிநொச்சியில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்தார்.

குறித்த கூட்டத்தில், வன்னி வெள்ளப் பாதிப்புகள் மற்றும் நிவாரண வழங்கள் தொடர்பாக இந்தக் கூடத்தின் போது கலந்துரையாடப்பட்டது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தல‍ைமையில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், படையினர், சமூக நலன் அமைப்புக்கள் மற்றும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் என அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.