சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

(FASTNEWS | COLOMBO)- சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் இன்று(03) காலை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

ஜுன் மாதத்துக்கான முதலாவது பாராளுமன்றக் கூட்டத்தொடர் எதிர்வரும் 04ம் திகதி ஆரம்பமாகின்றது.

இந்நிலையில், செவ்வாய் முதல் வெள்ளிவரை நடைபெறவுள்ள சபை அமர்வுகளின்போது கலந்தரையாடப்படவேண்டிய விடயங்களை குறித்து ஆராய்வதற்கும், திகதிகளை ஒதுக்கீடு செய்வதற்காகவுமே இக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.