சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில்

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் பல்கழலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னிலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பிரிவை இரத்தினபுரியில் நிறுவ இருப்பதை எதிர்த்தே குறித்த போராட்டம் நடத்தப்படுகிறது.

 

இதேவேளை, குறித்த தொழில்நுட்ப பிரிவையும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தினுள்ளேயே நிறுவுமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், தமது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் நாடு தழுவிய ரீதியில் போராட்டத்தை முன்னெடுப்போம் என மாணவர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.