சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்…

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள், பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்துக்கு அருகிலுள்ள, பொலிஸ் நிலையம் முன்பாக, இன்று(06) அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழக வளாகத்தில், மாணவர் நினைவுத்தூபி ஒன்றை அமைப்பதற்கு எடுத்த நடவடிக்கைக்கு எதிராக, தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று(06) நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், இவர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

14 மாணவர்களுக்கு எதிராக, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.