சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியில் ஹிதெல்லன பகுதியில் வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசியல்வாதிகள் சிலரால் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் மாணவ சங்கத்தின் தலைவர் நிஸ்ஸங்க கமகே தெரிவித்துள்ளார்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(17) திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.