சப்ரகமுவ பல்கலையின் வைத்திய பீடம் 17 ஆம் திகதி ஆரம்பம்…

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடம் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்திருந்தார்.

அன்றைய தினம், இரத்தினபுரி வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக தரம் உயர்த்தும் நிகழ்வு மற்றும் வைத்திய பீட மாணவர்கள் 75 பேர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.