(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய காபந்து அரசாங்கத்தின் பாராளுமன்ற அமர்வில் சபாநாயகர் பதவிக்கான போட்டியில் பல சிரேஷ்ட உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார போன்றவர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரும் அதில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.