சமிந்த உள்ளிட்ட ஐ.தே.கட்சியின் குழுவொன்று எதிரணிக்கு…

பாராளுமன்றில் சுயாதீனக் குழுவாக எதிர்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரி உள்ளிட்ட பின்வரிசை பாராளுமன்ற குழுவொன்று ஆயத்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கான அனுமதியினை பெற்றுக் கொள்ள எதிர்வரும் தினங்களில் கட்சியின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாட குறித்த குழு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குழுவொன்று பாராளுமன்றில் எதிர்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேலைத்திட்டங்களை விமர்சிப்பதனால் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.