இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த எரங்க’வின் பந்து வீச்சு குறித்து சந்தேகம் நிலவியுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றையதினம் இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நிறைவடைந்தது.
இதன் போதே இவ்வாறான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரிகளால், இலங்கை கிரிக்கெட் அணியின் நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக, சர்வதேச கிரிக்கெட் கவுனிசில் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.