சமிந்த வாஸின் சாதனையை முறியடித்த சுழற்பந்து வீச்சாளர் ரங்கண ஹேரத்..

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தென்னாப்பிரிக்காவின் கேப்ரவுனில் இன்று(03) நடைபெறவுள்ளது.

போட்டியின் முதல் இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் தென்னாப்பிரிக்க அணி, நேற்றைய முதலாம் நாள் ஆட்டம் நிறைவடையும் போது 6 விக்கட்டுகளை இழந்து 297 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இதேவேளை , இலங்கை அணி சார்பில் அதிக விக்கட்டுக்களை வீழ்த்திய வீரர்களில் இரண்டாது இடத்தில் இருக்கும் இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸின் சாதனையை , சுழற்பந்து வீச்சாளர் ரங்கண ஹேரத் நேற்று(02) சமப்படுத்தியிருந்தார்.

தென்னாபிரிக்க அணித்தலைவர் டூ பிளஸ்ஸிஸ்ஸை ஆட்டமிழக்க செய்து இந்த சாதனையை அவர் சமன் செய்தார்.

தற்போதைய நிலையில் , சமிந்த வாஸ் மற்றும் ரங்கண ஹேரத் ஆகிய இருவரும் தலா 355 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளனர்.

இந்த பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

டூ பிளஸ்ஸிஸ்ஸின் ஆட்டிமிழப்பு … காணொளி கீழே…

[youtube url=”https://www.youtube.com/watch?v=5ri2fhD3Itk” width=”560″ height=”315″]