சமூகவலைத்தளத்தில் வைரலான சமந்தாவின் புகைப்படம்!

நடிகை சமந்தா சில நாட்களுக்கு முன் தான் நடிகர் நாக சைதன்யாவை நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். நீண்ட நாட்களாக காதலித்து வரும் இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள்.

சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று கையில் கத்தியுடன் யாரையோ வெட்டுவது போல் புகைப்படம் வெளியானது. கொஞ்ச நேரத்திலேயே இது மிக வேகமாக பரவியது.

பின் தான் தெரிந்தது இது படத்திற்கான புகைப்படம் என்று. விஜய் சேதுபதி மற்றும் பகத் ஃபாசிலுடன் அவர் இப்போது தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் அநீதிக்கதைகள் என்னும் படத்தில் நடித்துவருகிறார்.

இதில் தான் அப்படி ஒரு காட்சி என்று சமந்தா குறிப்பிட்டுள்ளார். இதே படத்தில் ஏற்கனவே விஜய் சேதுபதி பெண் வேடத்தில் இருப்பது போல புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.