சமூக ஊடக வலையமைப்புக்களை அடக்க முடியாது – ஊடகப் பிரதி அமைச்சர்

சமூக ஊடக வலையமைப்புக்களை கட்டுப்படுத்த முடியாது என ஊடகப் பிரதி அமைச்சர் கருணாரடத்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் சட்ட திட்டங்களின் ஊடாக சமூக ஊடக வலையமைப்புக்களை கட்டுப்படுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(28) உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்கள் என்பதும் சமூக ஊடகங்கள் என்பதும் இரண்டு வெவ்வேறு துறைகளாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமூக ஊடகங்களை பயன்படுத்தும் அளவிற்கு சமூகம் வளர்ச்சியடைந்துள்ளதா என்பதனை சிந்தித்து பார்க்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.