பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து உடனே வெளியேற வேண்டும் என இராணுவ தலைமை அலுவலகம் உத்தரவிடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் ராவல் பிண்டியில் இயங்கும் இராணுவ தலைமை அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இந்த உத்தரவு பணியில் இருந்து ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய இராணுவ இரகசியங்கள் மற்றும் தகவல்கள் கசிவதை தடுக்க இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.