சமூக வலைதளங்களுக்கு பிரவேசிப்பதற்காக விதிக்கப்பட்ட தடை தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை…

பேஸ்புக் வட்சப் உள்ளிட்ட சமூக இணையத்தளங்களுக்கு பிரவேசிப்பதற்காக விதிக்கப்பட்ட தடை தொடர்பிலான இடையூறுகளுக்கு இன்று(12) தீர்வைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்குறுத்தல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சமூக இணையத்தள இடையூறுகள் தொடர்பில் தொலைத் தொடர்பு ஆணைக்குவில் விசேட பேச்சுவார்த்தையொன்று இன்று(12) நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டார்.

கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை கருத்தில் கொண்டு, பேஸ்புக் ,வைபர், வட்சப் உள்ளிட்ட சமூக இணையத்தளங்களுக்குள் பிரவேசிப்பதை இடைநிறுத்துவதற்கு தொலைத்தொடர்பு ஓழுங்குறுத்தல் ஆணைக்குழு கடந்த 07ஆம் திகதி தீர்மானம் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

#rishma