தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் எமி ஜாக்சன் – ஜார்ஜ் பனயோட்டு உடனான காதலை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தியுள்ளார்
எமி ஜாக்சன் விஜய் இயக்கிய மதராசப்பட்டிணம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இவரது நடிப்பில் கடைசியாக 2.0 பிரம்மாண்ட படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். ஹாலிவுட்டில் பிரபலமான சூப்பர் கேர்ள் இணைய தொடரிலும் எமி நடித்துள்ளார்.
சமீபத்தில் எமி ஜாக்சன், ஜார்ஜ் என்ற தொழிலதிபருடன் உதட்டுடன் முத்தம் கொடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகிய நிலையில், தனது ஜார்ஜ் உடனான காதலை எமி உறுதிப்படுத்தியுள்ளார்.
புத்தாண்டு தினமான நேற்று, ஜார்ஜ் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட எமி ஜாக்சன், “வாழ்க்கையில் புதிய துவக்கத்தில் கால் பதிக்கிறோம். நான் உங்களை காதலிக்கிறேன். உலகத்திலேயே அதீத மகிழ்ச்சியுடன் நான் இருப்பதற்கு காரணமாக இருப்பதற்காக நன்றி.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் எமி ஜாக்சன் – ஜார்ஜ் பனயோட்டு திருமணம் விரைவில் நடைபெற இருப்பது உறுதியாகி இருக்கிறது.