சமூக வலைத்தளங்களில் டிரண்டாகும் #RIPActorVijay ஹேஷ்டேக் – பல நட்சத்திரங்கள் கடும் கண்டனம்

(FASTGOSSIP|COLOMBO) அஜித்தின் நேர்கொண்டபார்வை ஆகஸ்ட் 8-ம் திகதி வெளியாக இருக்கும் நிலையில் #ஆகஸ்ட் 8பாடைய கட்டு என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்ய, பதிலுக்கு #RIPActorVijay என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டது.

அஜித், விஜய் ரசிகர்களின் இந்த செயல் பலரையும் வருத்தமடையச் செய்துள்ளது.

இந்நிலையில் தற்போது #LongLiveVIJAY என்ற பாசிட்டிவ்வான ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

இதுகுறித்து கருத்து பதிவிட்டிருக்கும் நடிகரும், விஜய் ரசிகருமான சிபிராஜ், “எதிர்மறையான ஹேஷ்டேக்கை சில முட்டாள்கள் டிரெண்ட் செய்வதை பார்க்கும்போது எரிச்சலாக உள்ளது. இதுபோன்ற செயல்கள் அந்த மனிதரை வலிமைப்படுத்தும் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. அடுத்த முறை முயற்சி செய்யுங்கள் முட்டாள்களே” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் இது கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ”நாட்டின் பல இடங்களில் மழை, பஞ்சம், குற்றச் செயல்கள் என பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது. ஆனால், நமது மாநிலத்தின் இளம் தலைமுறையினரோ #RIPActorVijay-யை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்” என்று இந்த வெற்று மோதல்களில் நேரம் செலவழிப்பதை விட்டுவிட்டு, உபயோகமாக ஏதாவது செய்யுங்கள் என்று அஸ்வின் பதிவிட்டுள்ளார்.