சமூக வலைத்தளங்களில் வெளியான தேர்தல் முடிவுகள் [PHOTOS]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காலி மாவட்டத்தில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

47 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த தேர்தலில் 53,384 பேர் வாக்களிக்க தகுதி பெற்ற நிலையில் அதில் 72 சதவீதமானோர் வாக்களித்துள்ளனர்.

இந்த பிரதேச சபைக்காக 28 அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

தொகுதி அடிப்படையில் 11 அங்கத்தவர்களும், விகிதாசார வாக்களிப்பிற்கு அமைவாக 17 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.