பரவலாக சமூக வலைத்தளங்களின் ஊடாக நட்பை ஏற்படுத்தும் அறிமுகமில்லாதவர்கள் மூலமாக, நிதி மோசடிகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு கணினி அவசர பதிலளிப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் கடந்த தினங்களில் பல்வேறு சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக கணினி அவசர பதிலளிப்பு மையத்தின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.