சம்பளம் அதிகரிப்பு – இன்றும் பணிப்புறக்கணிப்பில்…

பெருந்தோட்டத் தொழிலாளர்களது அடிப்படை சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பல தோட்டங்களில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று(05) இரண்டாவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது என தெரிவிக்கப்படுகிறது.

1000 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்படும் வரையில் இந்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை கருதி, தங்களால் இந்த போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவர் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.