மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் இந்த சீசனுக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் ஊதிய ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் பெண்கள் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல், டி20 அணியின் தலைவர் டேரன் சமி, சகலதுறை வீரர் வெய்ன் பிராவோ, ஆண்ட்ரி ரஸல் ஆகியோர் இடம்பெறவில்லை.
அதே போல் சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடைவிதிக்கப்பட்டுள்ள முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைனும் இடம்பெறவில்லை.
ஊதியப் பட்டியலில் இடம்பெற்ற வீரர்கள்:-
ஜாசன் ஹோல்டர், பிராத்வைட், டேரன் பிராவோ, சாமுவேல்ஸ், ராம்தின், கீமர் ரோச், ஜெரோம் டெய்லர், பிளாக்வுட், லியோன் ஜான்சன், ஷேன் டவ்ரிச், ஷாய் ஹோப், ராஜேந்திர சந்திரிகா, தேவேந்திரா பிஷூ, ஷானான் கேப்ரியல், ஷெல்டன் காட்ரல்.