பெரும்போகத்திற்காக அரசாங்கத்தின் நெல் கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தினை செயற்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பெரும்போகத்திற்காக அரசாங்கத்தின் நெல் கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் கிராமிய பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் பி.ஹெரிசன் ஆகியோர் முன்வைத்த யோசனைகளை கவனத்திற் கொண்டு, நெல்லினை கொள்வனவு செய்வதற்கான ஆகக் குறைந்த விலையினை உறுதி செய்வதற்காக அரச தலையீடு அவசியப்படுகின்ற மாவட்டங்களில், நாடு நெல் 1Kg 38/=, சம்பா 1Kg 41/=, கீரி சம்பா 1Kg 41/# வீதமும், நெல் விற்பனை சபை மற்றும் உரிய மாவட்ட செயலகத்தின் தலையீட்டில் அடிப்படையில் அரசாங்கத்தின் மூலம் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
#rishma