சம்பிக்க ரணவக்க 1980களில் ஜே.வி.பி.யில் உறுப்புரிமை வகித்திருந்தார், அதன் பின்னர் 1994ம் ஆண்டில் ஜனதா மித்துரோ என்னும் கட்சியை ஆரம்பித்து அதில் உறுப்புரிமை வகித்து வந்தார்.
1999ம் ஆண்டில் சிஹல உறுமய கட்சியில் அங்கத்துவம் பெற்றுக்கொண்டார். பின்னர் 2004ம் ஆண்டு ஜாதிக ஹெல உறுமய கட்சியல் இணைந்து கொண்டார்.
2005ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்ட சம்பிக்க, இந்த ஆண்டில் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கும் நோக்கில் புதிய ஜனநாயக முன்னணியில் இணைந்து கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பின்னர், ஐக்கிய தேசிய முன்னணியில் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியிருந்தார்.
விரைவில் சம்பிக்க ரணவக்க எட்டாவது தடவையாகவும் கட்சி மாற உள்ளதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.