சம்மாந்துறை மண்ணில் மாத்திரமல்லாது, முழு அம்பாறை மாவட்டத்திலும் கடினபந்து கிரிக்கெட் விளையாட்டில் பிரபல அணியாக திகழ்ந்துவரும் சம்மாந்துறை விளையாட்டு கழகத்திற்கான (எஸ்.எஸ்.சி) கடினபந்து கிரிக்கெட் உபகரணம் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் அதன் செயலாளர் அஜ்வத் ஆசிரியரின் தலைமையில் நடைபெற்றது.
சம்மாந்துறை விளையாட்டுக்கழக முகாமையாளரினால் சமூக சேவையாளரும், விஞ்ஞான முதுமானியுமான அஸ்மி யாஸீன் அவர்களிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கடினபந்து கிரிக்கெட் விளையாட்டு தேவையான கால் பாதுகாப்பு அங்கிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சமூக சேவையாளரும், விஞ்ஞான முதுமானியுமான அஸ்மி யாஸீன் அவர்கள் கலந்துகொண்டு குறித்த உபகரணத்தை விளையாட்டு கழகத்திடம் வழங்கிவைத்தார். மேலும், விளையாட்டு கழக நிர்வாகிகள், கழக வீரர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் என பலரும் இதன் போது கலந்து கொண்டனர்.
