முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த 9 வழக்குகள் தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, கொழும்பு மேலதிக நீதவான் அருனி அர்டிகல தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன, அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக இருந்த போது மேற்கொண்ட ஊழல் மோசடி தொடர்பிலேயே இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இலஞ்ச சட்டத்தின் 70வது பிரிவின் கீழ் இவர் மீது இலஞ்ச ஊழல் பிரிவு வழக்கு தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சரண குணவர்தன குற்றவாளி இல்லை என வாதாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.