சரத் வீரவன்ச, ஜயந்த ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்ச, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர ஆகியோரை எதிர்வரும்; 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தின்போது, அரசாங்க வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பில், பொலிஸ் நிதிக்குற்ற மோசடிப் பிரிவுக்கு வாக்குமூலமளிக்க கடந்த செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதியன்று சென்றிருந்த சரத் வீரவன்சவை, பொலிஸ் நிதிக்குற்ற மோசடி பிரிவினர் கைதுசெய்தமையும் குறிப்பிடத்தக்கது.