சர்கார்’ இந்திய சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒரு படமாகவுள்ளது.
நான்காவது முறையாக விஜய், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இந்தப் படத்திலும் அமைந்துள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா ஒக்டோபர் 2 ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், ‘சிம்டாங்காரன்’ என்ற சிங்கிள் ட்ராக் நேற்று வெளியானது.
இதற்கிடையில் ‘சிம்டாங்காரன்’ என்ற வார்த்தைகான அர்த்தம் என்னவென்று பாடலாசிரியர் விவேக் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். ‘கவர்ந்து இழுப்பவன்’, ‘பயமற்றவன்’, ‘துடுக்கானவன்’ என்பவைதான் ‘சிம்டாங்காரன்’ என்ற பெயருக்கு அர்த்தம் என்று தெரிவித்திருந்தார்.
இப்பாடலில் சென்னைத் தமிழ் வார்த்தைகள் தான் அதிகம் இடம்பெற்றுள்ளது.
யூ டியூப் இல் இந்த பாடல் 05 இலட்சம் பார்வையாளர்களையும் 03 இலட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது
குறித்த பாடல்..