சர்கார் படம் வெளியிடும் திகதியில் மாற்றம்…

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சர்கார்’ படத்தை தீபாவளிக்கு முன்பே வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் – கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளி பண்டிகையான எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி திரைக்கு வரும் என்று அறிவித்து இருந்தனர்.

தமிழ்நாடு முழுவதும் அதிகமான தியேட்டர்களை ‘சர்கார்’ படத்துக்கு ஒதுக்கி உள்ளனர்.

இந்த நிலையில் தீபாவளிக்கு முன்னதாக எதிர்வரும் 2-ஆம் திகதி ‘சர்கார்’ படத்தை திரைக்கு கொண்டு வருவது குறித்து படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.