விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தின் HD .பிர்ண்ட் இன்றே இணையதளத்தில் வெளியாகும் என்று தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்கள்.
இது பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏற்கனவே புதிய திரைப்படங்களை சட்டவிரோதமாக தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது.
இதனை தடுக்க தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், சர்கார் படம் தொடர்பாக தமிழ்ராக்கர்ஸ் வெளியிட்டுள்ள சவாலை முறியடிப்போம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டது.
தற்போது தமிழ் ராக்கர்ஸ், சர்கார் படத்தின் எச்.டி.பிர்ண்ட் இன்றே வெளியாகும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்கள். இது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.