சர்ச்சைக்குரிய சைட்டம் குறித்த இறுதித் தீர்வு திங்களன்று – சுமார் 100 தொழிற்சங்கங்கள் அரசுக்கு எதிராக களத்தில்…

சர்ச்சைக்குரிய சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கம் தீர்வொன்றை வழங்காது போனால், தாம் முன்னெடுக்கவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு வழங்க, நாட்டிலுள்ள சுமார் 100 தனியார் மற்றும் அரச துறை தொழிற்சங்கங்கள் இணைந்து கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை(03) கூடவுள்ள சங்கத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தின் போது இது தொடர்பிலான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் துணைச் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றின் மூலம் ஆறு யோசனைகளை முன்வைத்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி அறிவிக்கவுள்ள தீர்மானத்தை வைத்தே அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜே.வி.பி.யின் வசந்த சமரசிங்க அறிவித்துள்ளார்.

தாம் முன்னெடுக்கும் தொழிற்சங்க நடவடிக்கைகளின் போது, ஏற்படும் பொருளாதார பின்னடைவு, நாட்டில் பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்பவற்றுக்கு ஜனாதிபதியும், அரசாங்கமும் பொறுப்புச் சொல்ல வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் எம்.பி.யான வசந்த சமரசிங்க மேலும் கூறியுள்ளார்.

 

(rizmira)