சர்ச்சைக்குரிய சைட்டம் பிரச்சினை தொடர்பில் தீர்வினை பெற்று தருவதாக ஜனாதிபதி உறுதி மொழியளித்ததாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று(15) இரவு ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலினை தொடர்ந்து, அதன் செயலாளர் மருத்துவர் நவிந்த சொய்சா ஊடகங்களுக்கு இது குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பல அரச மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.