சர்ச்சைக்குரிய மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்ளுதல் உள்ளிட்ட சில முக்கிய தீர்மானங்கள் இன்று(15) அறிவிக்கப்படவுள்ளதாக
உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு நட்டஈட்டையும் பெற்றுக் கொள்ளாமல் மாலபே தனியார் பல்கலைக்கழகத்தை அரசாங்கத்திடம் கையளிக்க பல்கலைக்கழக நிர்வாகம் உடன்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனியார் மருத்துவ கல்வி துறையில் முறையான திட்டமிடல்கள் முன்னெடுக்கப்படும் வரை மாலபே தனியார் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.